விஜய்யின் மாஸ்டர் வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? Vijay Master Pre release Business 


விஜய் தற்போது தன்னுடைய 64 திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படத்திற்கு மாஸ்டர் என பெயர் வைத்துள்ளார்கள். 

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது. பிகில் திரைப் படம் வெளியாகிய அதே நாளில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் வெளியாகியது இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார் இரு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இதன் காரணமாக இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

தற்போது இத்திரைப்படத்தில் வியாபாரம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமே படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. தெலுங்கு டப்பிங் உரிமை, கர்நாடகா உரிமை ஆகியவை விற்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். இப்போது படத்தின் வெளிநாட்டு உரிமையை யுனைட்டெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் மாலிக் ஸ்டிரீம்ஸ் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

பிகில் திரைப்படத்தை விட இது குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் கூட இப்படத்தின் வியாபாரம் பிகில் திரைப்படத்தை விட அதிகம் என கூறப்படுகிறது.
 

Post a Comment

Previous Post Next Post