தடைகளை உடைத்து மலேசியாவில் தர்பார் வெளியானது :Rajinikanth's Darbar released in Malaysia 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா,நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள படம் தார்பார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து இருக்கிறது.

இந்நிலையில் தற்போது திரைப்படம் மலேசியாவில் வெளியிடுவதில் பல்வேறு தடைகள் இருந்தது. லைக்கா நிறுவனத்துக்கு மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய் என்ற நிறுவனம் கடன் கொடுத்திருந்தது. 


இந்தக் கடனை வட்டியுடன் வங்கி உத்தரவாதத்தை நீதிமன்ற பதிவாளரிடம் அளித்து விட்டு படத்தை மலேசியாவில் வெளியிடலாம் கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து லைகா நிறுவனம் அந்த பணத்தை கோர்ட்டில் செலுத்தியதாக தெரிகிறது.இதையடுத்து தற்போது திரைப்படம் மலேசிய நாட்டில் 100க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது இது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post