பயங்கர வெறித்தனமா இருக்கு "பட்டாஸ்" ட்ரைலர் : PATTAS Trailer Review | Patta Trailer Dialogue

தனுஷ் நடித்திருக்கும் பட்டாஸ்  திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றது, எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் இடம்பெறும் நமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும், நம்ம மண்ணோட ஈரத்த காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்குறது நம்ம கடமை இல்லையா போன்ற வசனங்கள் தனுஷ் ரசிகர்களுக்கு இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 16-ந் தேதி ரிலீசாக உள்ளது.


Post a Comment

Previous Post Next Post