தர்பார் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு - Krishnagiri Police Denied Permission For Darbar Special Show in Krishnagiri

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள் .இந்நிலையில் படக்குழு இதுவரைக்கும் தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் எந்த நடிகரின் படத்தின் சிறப்பு காட்சிக்கும் கிருஷ்ணகிரி மண்டலத்தில் அனுமதி கிடையாது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் ரிலீசின் போது கிருஷ்ணகிரியில் சிறப்பு காட்சி தாமதமாக திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுமார் 40 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக தற்போது தர்பார் திரைப்படத்திற்கு கிருஷ்ணகிரியில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது.Post a Comment

Previous Post Next Post