Jayasree Suicide Attempt : சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி 


வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. ராஜா ராணி, கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் பிரபலமானவர் ஈஸ்வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ மற்றும் அவரின் கணவர் ஈஸ்வர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.


தேவதையை கண்டேன் என்ற சீரியலில் நடித்து வந்த இவர், உடன் நடித்த மகாலட்சுமி உடன் நெருக்கமானதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி குடித்துவிட்டு தன்னையும் தன்னுடைய மகளையும் துன்புறுத்துவதாக சமீபத்தில் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்தது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த ஜெயஸ்ரீ தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவரை மீட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.


Post a Comment

Previous Post Next Post