ரிலீஸுக்கு முன்பே 200 கோடி ரூபாய் வியாபாரம் : Vijay Master movie Pre-Business update


நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. பிகில் திரைப்படத்தை விட இத்திரைப்படம் குறைவான பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் குறைவான பொருட்செலவில் எடுக்கப்பட்டாலும் இத்திரைப்படத்தின் வியாபாரம் அதிகமாக இருக்கின்றது. பிகில் திரைப்படத்தை விட சற்று குறைவான தொகைக்கு இத்திரைப்படம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அதற்கு முக்கிய காரணம் இத்திரைப்படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் நல்ல லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக என கூறப்படுகிறது. 

தற்போது வரையில் திரைப்படம் 200 கோடி ரூபாய் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 


Post a Comment

Previous Post Next Post