விஸ்வாசம் வசூல் இத்தனை கோடியா ? வெளியான புதிய தகவல் : Viswasam Box Office Collection in Tamil Nadu


விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களுக்கு இடையே சமீபத்தில் யாருடைய திரைப்படத்திற்கு அதிக வசூல் என்ற வாக்குவாதம் இணையத்தில் ஏற்பட்டது.

விஜய் நடித்து வெளிவந்த பிகில்  திரைப்படம் அஜித் அவர்களின் விசுவாசம் திரைப்படத்தை விட அதிகம் வசூல் செய்ததாக சில சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்தார்கள். இதை எதிர்த்து அஜித் ரசிகர்கள் இணையத்தில் வாக்குவாதம் செய்து வந்தார்கள்.

இந்நிலையில் விசுவாசம் வசூல் நிலவரம் பற்றி தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பல சினிமா விமர்சகர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

இந்நிலையில் இதைப் பற்றிய ஒரு செய்தி பிரபல நாளிதழில் வெளியாகியுள்ளது. இதில் விசுவாசம் தமிழ் நாட்டில் 135 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த செய்தியை அடுத்து அஜித் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.


Post a Comment

Previous Post Next Post