வாழ்த்துக் கூறிய கவின் ? சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய பட அப்டேட் : Sivakarthikeyan's next film titled doctorசிவகார்த்திகேயன் தற்போது ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை பற்றின அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6ம் தேதி துவங்க இருக்கின்றது.

இந்நிலையில் இதைப்பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற கவின் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமிபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கவின் இருவரும் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவின் அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற ஒரு தகவலும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் இந்த தகவலை பற்றி இப்படத்தில் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 


Post a Comment

Previous Post Next Post