இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ? இயக்குநர் வேதனை : Mettupalayam Building Collapse


நேற்றைய தினம் (டிசம்பர் 2 பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி என்ற செய்தி தமிழ்நாடு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இடிந்து விழுந்த தீண்டாமை சுவர் என கூறப்படுகிறது. இந்த சுவர் இடிந்து விழுந்து ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குருசாமி, ஒபியம்மாள் ஆகிய ஐவரின் குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்கள். 

இதையடுத்து அந்த சுவரின் உரிமையாளரை கைது செய்யுமாறு மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.

இதைப் பற்றி கருத்து கூறிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ?என தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post