ரசிகர்களால் உயரத்தை தொட்ட கவின் :Bigg Boss Kavin Trending On Twitter!



பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் பங்கு பெற்றாலும் கவின் அவர்களை மையப்படுத்திதான் இந்த பிக் பாஸ் சீசன் 3 தமிழில் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

கவின் அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது அதன் காரணமாக விஜய் டிவி பெரும்பாலான புரோமோ வீடியோக்களில் கவின் இருக்கும் காட்சிகளை மட்டும் வெளியிட்டார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தற்போது சினிமா வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் கவின். இதற்கு அவரின் ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.

பெரும்பாலும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தான் இணையத்தில் வெறித்தனமாக இருப்பார்கள் ஆனால் தொடர்ந்து பலமுறை கவின் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

இந்த உயரத்திற்கு கவின் அவர்களின் ரசிகர்கள் முக்கியப் பங்கு ஆற்றி வருகிறார்கள் விரைவில் அவரின் திரைப்பட அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.


Post a Comment

Previous Post Next Post