சொன்ன வாக்கை காப்பாற்றிய இமான் : Thirumoorthy Debut song


ரத்தின சிவா இயக்கத்தில் , வேல்ஸ் பிலிம் international சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், ஜீவா நடிப்பில் “சீறு” திரைப்படம் திரைக்கு வரவிருக்கின்றது.


இப்படத்திற்கு இமான் வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி, அண்மையில் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான், அந்த இளைஞரை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்கு வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்திருந்தார்.


தற்போது அந்த சிறுவன் ஜீவா நடித்த “சீறு”  செவ்வந்தியே என்ற பாடலை பாடியுள்ளார். இவர் பாடிய அந்த பாடல் டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது தற்போது அந்த ப்ரோமோ வீடியோவை சமூக வலைத்தளத்தில் படத்தயாரிப்பு நிறுவனமும் இசையமைப்பாளர் இமான் அவர்களும் வெளியிட்டுள்ளார்கள்.

இதன்மூலமாக இமான் சொன்ன வாக்கை காப்பாற்றி உள்ளார்

Post a Comment

Previous Post Next Post