காப்பி அடித்தே படம் எடுத்தால் நல்ல இயக்குனராக இருக்கமாட்டார் : Panimalar Panneerselvam Comment about Atleeஇயக்குனர் அட்லீ பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கினாலும் அவர் மீது பல்வேறு விமர்சனம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. பலரும் இவருடைய திரைப்படம் வேறு ஒரு திரைப்படத்தில் இருந்து சில காட்சிகளை இவர் தன்னுடைய படத்திற்கு பயன்படுத்தி வருகின்றார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அந்த வரிசையில் தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் Panimalar Panneerselvam இயக்குனர் அட்லீ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

 யார் வேண்டுமானாலும் ஒரு கதையின் தழுவலை எடுக்கலாம், தனக்கு தகுந்தாற்போல் மாற்றி கையாளலாம், ஏன் பச்சையாக காப்பிகூட அடிக்கலாம். ஆனால் அமைதியாக இருந்திருக்கலாம். அட்லி ஒரு நல்ல assembler, பல படங்களின் கதையை ரசனைக்குறிய காட்சிகளை நேர்த்தியாக கோர்த்து அழகாக தருகிறார், ஆனால் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தால் இவ்வளவு வெறுப்பை சம்பாதித்திருக்கமாட்டார். என்னுடைய பெஸ்ட் ரைட்டிங், அண்ணனுக்காக பாத்து பாத்து பண்ணிருக்கேன்னு அளந்துவிட்டாரே அதுதான் பிரச்சனை.

படக்குழுவை தேர்வு செய்வது, நடிகர்களை மற்ற படங்களைக் காட்டிலும் அழகாக காட்டுவது, எங்கே எமோஷனல் காட்சிகளை வைத்தால் எப்படி கிளிக் ஆகும் போன்ற விசயங்களில் காட்டும் அக்கறையை கொஞ்சமேனும் கதைக்கும், காட்சிகளுக்கும் காட்டினால் அட்லிக்கு நல்ல இயக்குனர் என்ற வரிசையில் கண்டிப்பாக இடம் கிடைக்கும். இப்படி காப்பி அடித்தே படம் எடுத்தால் விமர்சனங்களுக்கு மத்தியிலும் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து முன்னணி வரிசையில் இருத்துகொண்டுதான் இருப்பார், ஆனால் நல்ல இயக்குனராக இருக்கமாட்டார் என Panimalar Panneerselvam கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post