எனக்கு விஜய் டிவி சம்பளம் கொடுக்கவில்லை : Bigg Boss Meera Mithun Latest Press Meetபிக்பாஸ் நிகழ்ச்சியில் மீராமிதுன் என்பவர் போட்டியாளராக பங்கேற்றார். இன்று மீராமிதுன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அந்தப் பேட்டியில் மீராமிதுன் கூறியது நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் என்னுடைய பெயரை மக்கள் மத்தியில் மிக எளிதாக இந்த நிகழ்ச்சி எடுத்துச் செல்லும் என்ற நோக்கத்துக்காக தான் பிக்பாஸ் போட்டியில் பங்கு கொண்டேன் என்றார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றபோது என்னைப் பற்றி ஒரு சிலர் யூடியூபில் தவறாக பேசி வந்தார்கள். அந்த வீடியோக்கள்தான் யூடியூபில் முன்னிலையில் இருக்கிறது. இது என்னுடைய பெயரை கெடுக்கும் வண்ணம் இருக்கிறது.அது மட்டுமில்லை விஜய் டிவி எனக்கு தரவேண்டிய சம்பளப் பணத்தை விரைவில் தர வேண்டும் இல்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் . இதுவரைக்கும் இது நிகழ்ச்சிக்காக விஜய்டிவி எனக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என அதிர்ச்சியூட்டும் தகவலை மீரா வெளியிட்டார் .

Post a Comment

Previous Post Next Post