பிரியங்கா மரணம் கொந்தளித்த நடிகை : Actress Keerthi Suresh On Priyanka Reddy

Priyanka Reddy,priyanka reddy images download


தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி. இவர் அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவர் சமீபத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இதை விசாரித்த தெலுங்கானா போலீசார் இந்த மரணம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட உள்ளது என்று கூறியுள்ளார். நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் பிரியங்கா ரெட்டியை கடத்தி வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பிரியங்கா ரெட்டிக்கு நீதி கேட்டு சமூக வலைத்தளங்களில் மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். தற்போது இதைப்பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார் .

பிரியங்கா கொலை செய்யப்பட்டதை அறிந்த போது என்னுடைய இருதயமே நொறுங்கிப் போனது வன்புணர்வு செய்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது மனது ரொம்பவும் வலிக்கின்றது 

ஹைதராபாத் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்றுதான் நான் நினைத்திருந்தேன் ஆனால் தற்போது அது மாறிவிட்டது இந்தியா எப்போது பெண்களுக்கு பாதுகாப்பான நாடாது மாறும் எனவும் இந்த கொடூர கொலையை செய்தவருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என கீர்திசுரேஷ் அந்தப் பதிவில் கூறியுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post