மிக மிக அவசரம் நவம்பர் 8 வெளியீடு : Miga Miga Avasaram Movie Release Date

miga miga avasaram ,miga miga avasaram images,miga miga avasaram pictures


மிக மிக அவசரம் திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படம் என்பதால் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா, ஹரிஷ், முத்துராமன், இ.ராமதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் சீமான் அவர்களும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தில் நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்கள் இல்லை என இப்படத்தை வெளியிட சில விமர்சகர்கள் தயக்கம் காட்டியதால் இப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி மிக மிக அவசரம் திரைப்படம் வெளியாகவில்லை. இதைப்பற்றி படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் கூறியதாவது வெறும் 17 தியேட்டர்களில் கொடுத்தால் எப்படி திரைப்படத்தை வெளியிடுவது என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

தற்போது இந்தத் திரைப்படம் நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வருகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்கள் படக்குழுவினர்

Post a Comment

Previous Post Next Post