அட்லீயின் அடுத்த பட டைட்டில் வெளியாகியது : Title of the film directed by Atlee with Shahrukh Khan
பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் இயக்குனர் அட்லீ அவர்களின் திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றது. ராஜா ராணி திரைப்படத்திற்கு அடுத்ததாக  நடிகர் விஜய் அவர்களை வைத்து மூன்று திரைப்படங்களை அட்லீ இயக்கினார்.

மூன்று திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. சமீபத்தில் இவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களை வைத்து ஒரு திரைப்படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தன.

அந்தத் தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. ஷாருக்கான் அவர்களை வைத்து அட்லீ இயக்கும் படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.  இந்தத் திரைப்படத்திற்கு Sanki என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .


Post a Comment

Previous Post Next Post