சிம்புவின் 'மாநாடு' விரைவில் தொடங்கும்!  Simbu's 'Maanaadu' to start soonசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது . இந்தப் படத்தை தயாரிக்க சுரேஷ் காமாட்சி பலமுறை முயற்சி செய்தார் ஆனால் சிம்பு சூட்டிங்கிற்கு வரவில்லை.


இந்த பஞ்சாயத்தில் சிம்பு அவர்களின் தாய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சில தயாரிப்பாளர்கள் பங்கு பெற்றார்கள். இந்தக் கூட்டத்தில் சிம்பு எதற்காக மாநாடு படத்தை புறக்கணித்தார் என்று தயாரிப்பாளர்கள் சிம்பு அம்மாவிடம் கேள்வி எழுப்பினார்கள் .


தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சிம்பு ஏற்கனவே இப்படத்தில் நடிப்பதாக முன்பணம் வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்பொழுது இந்த திரைப்படத்தில் அவர் நடித்து கொடுப்பார் என கேள்விக்கு சிம்பு அவர்களின் தாயார் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என் மகன் இந்த திரைப்படத்தில் நடித்து கொடுப்பான் என உறுதியளித்து சென்றுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post