நாய்கள் குரைப்பதற்காக கார்கள் நிற்பதில்லை! சேரனுக்கு நடிகர் விவேக் அட்வைஸ் #CheranFansAgainstCyberBullyingதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் சேரன் அவர்கள் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.  அங்கு கவின் லாஸ்லியா இருவரின் காதலில் இவர் தலையிடுவதாக கூறி அவர்களின் ரசிகர்கள் ஒரு சிலர் இயக்குனர் சேரன் அவர்களை  சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றார்கள்.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சேரன் அவர்கள் #CheranFansAgainstCyberBullying என்ற ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி பல பதிவுகளை செய்து வருகிறார்  அதில் சேரன் கூறியதாவது “ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது. சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என பதிவிட்டார் 

இதற்கு நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் பதில் கொடுத்துள்ளார். “சேரன் சார்! உயர்ந்த நேர்மறைகளை பதிவிட்டு, எதிர்மறைகளை அலட்சியப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.  நாய்கள் குரைப்பதற்காக கார்கள் நிற்பதில்லை! “ என நடிகர் விவேக் இயக்குனர் சேரன் அவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் .

Post a Comment

Previous Post Next Post