விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை? மத்திய அரசு பரிசீலனை | Bigg Boss Should be Banned

prakash javadekar images,prakash javadekar picture


பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மற்றும் இல்லாமல் பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவிற்குள் வந்தது முதல் தற்போது வரை பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்வையிடுகிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஆபாசமான காட்சிகள் இடம் பெறுவதாகக் கூறி பலரும் நிகழ்ச்சிக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

சமீபத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான நந்த் கிஷோர் குஜ்ஜார் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்தப் புகாரில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமான காட்சிகள் இடம்பெறுவதாகவும் சமூக பொறுப்பற்ற வகையில் உள்ள ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இதைப் பற்றிக் கருத்து கூறிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமைச்சக அதிகாரிகளிடம் இதுகுறித்த அறிக்கை வழங்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அறிக்கை வந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் .

Post a Comment

Previous Post Next Post