இரண்டு போட்டியாளர்களை புறக்கணித்த பிக் பாஸ் : Bigg Boss 3 Tamil 5th October 2019

Bigg Boss 3 Tamil Final Day images


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் என்பதால் பிக்பாஸில் போட்டியாளராக பங்குபெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக  பங்கேற்ற சரவணன் மற்றும் மது பிக்பாஸ் வீட்டிற்கு வரவில்லை. சரவணன் பெண்கள் பற்றி பேசின ஒரு கருத்து காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மது தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நேற்றைய தினம் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு வீடியோவை காண்பித்தார். அதில் அனைத்து போட்டியாளர்களும் இருந்த காட்சிகள் இருந்தது.  ஆனால் மது மற்றும் சரவணன் இருக்கும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் மேடைக்கு வருவார்கள். மது மற்றும் சரவணன் இருவரையும் மேடைக்கு பிக்பாஸ் அழைப்பாரா என பொருத்திருந்து பார்க்கலாம்.


Post a Comment

Previous Post Next Post