சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? டாக்டர்கள் போராட்டம் குறித்து நடிகை கருத்து

tamil nadu government doctors strikeதமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.


இதையொட்டி முதலமைச்சர் அவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு அரசு மருத்துவர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதைப் பற்றி கருத்துக் கூறிய நடிகை கஸ்தூரி நீங்க மக்களை நோயாளியா பாக்குறீங்க.  ஆனா, மக்கள் நாங்க உங்களை கண்ணுக்கு தெரிஞ்ச கடவுளா பாக்குறோம். உங்களுக்கு தொழில், எங்களுக்கு உயிர். உங்களுக்கு கோரிக்கை பிரச்சினை, மக்களுக்கு வாழ்க்கை பிரச்சினை. கொஞ்சம் கருணை காட்டுங்க, கோரிக்கைகள் நியாயமானவை என்றாலும் கூட, அதை நிறைவேற்றும் சக்தி அரசாங்கத்துக்கு தற்போது உள்ளதா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? எனக் கூறியுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post