Bigg Boss Madhumitha Interview After Bigg Boss | Madhumitha Interview After Eviction

Credit : Vijay TV



பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு விஜய் டிவி மீது பல புகார்களை மது கொடுத்தார்.  விஜய் டிவியும் இவர் மீது புகார் கூறியது. பத்திரிக்கையாளர்களிடம் அதிகம் பேசாமல் இருந்த மது தற்போது வெளிப்படையாக சிலவற்றை கூறி உள்ளார் .


பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் என்னை இன்டர்வியூ கொடுக்க பிக்பாஸ் அனுமதிக்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் நடந்தவற்றை வெளியில் கூற கூடாது என்று சொன்னார்கள், அதன் காரணமாகதான் நான் காவல் துறையில் புகார் அளித்தேன் .

நான் ஹலோ ஆப் Task- என் ஒரு வரி கவிதை சொன்னேன் “‘ வருண பகவானும் கர்நாடகத்தை சேர்ந்தவர்களும் மழை வடிவில் கூட தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறார்’’  இந்த ஒரு கவிதையை வைத்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த எட்டு நபர்கள் அரசியல் செய்தார்கள் .

இது நடந்த சிறிது நேரத்தில் பிக்பாஸில் இருந்து மதுவிற்கு ஒரு Letter அனுப்பப்பட்டுள்ளது அதில் அரசியல் பேசாதீர்கள் நாங்கள் ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கையில் ரத்தம் வரும் அந்த நேரத்தில் கூட வீட்டில் உள்ள ஒரு சிலர் அதை பார்த்து சிரித்தார்கள் .அந்த இடத்தில் கஸ்தூரி மற்றும் சேரன் இருவரும் தான் உனக்கு உயிரின் மதிப்பு தெரியாதா என்று எனக்கு ஆறுதலாய் இருந்தது.

நான் மட்டும் அரசியல் பேசவில்லை தினந்தோறும் தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை அனைத்து போட்டியாளர்களும் பேசுகிறார்கள்.  இதில் நான் பேசுவது மட்டும் தவறு என்று எனக்கு மட்டும் பிக் பாஸ் லெட்டர் அனுப்பியது வருத்தம் அளிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்


Post a Comment

Previous Post Next Post