மீண்டும் நடிகர் விஜய்க்கு சிக்கல் : Actor Vijay Receives Income Tax Department Summons

Actor vijay income tax raid Update | Actor Vijay Receives Income Tax Department Summons

சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதுமட்டுமின்றி விஜய் அவர்களை வைத்து பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இதற்கு பண உதவி செய்த அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

சோதனை முடிவில் நடிகர் விஜய் வீட்டில் இருந்து எந்த ஒரு பணமும் கைப்பற்றவில்லை என வருமான வரி துறை தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி இந்த வருமான வரித்துறை சோதனையில் நடிகர் விஜய் அவர்களை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினார்கள் பின்பு அவர்களின் காரில் வைத்து நடிகர் விஜயை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.

ஒருவழியாக சோதனை எல்லாம் முடித்துவிட்டு தற்போது நடிகர் விஜய் தன்னுடைய மாஸ்டர் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். மீண்டும் நடிகர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை சம்மன் வாங்கியுள்ளது.

One Comment on “மீண்டும் நடிகர் விஜய்க்கு சிக்கல் : Actor Vijay Receives Income Tax Department Summons”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *