செம்பருத்தி சீரியல் இயக்குநர் மீது புகார் | Serial Actresses Complaint against Sembaruthi director

Sembaruthi director Neeravi Pandian : Serial Actresses Complaint against Sembaruthi director

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் காதல் பின்னணியை கொண்டதால் பல்வேறு ரசிகர்கள் இந்த சீரியலுக்கு இருக்கிறார்கள்.

ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடிக்கிறார்கள். இந்நிலையில் படப்பிடிப்பின் போது சரியாக நடிக்கவில்லை என இயக்குனர் நீராவி பாண்டியன் துணை நடிகைகளின் மனம் புண்படும்படி திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக துணை நடிகைகள் இயக்குனர் நீராவி பாண்டியன் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள். பின்பு இயக்குனரை அழைத்து காவல்துறை விசாரணை நடத்தி உள்ளார்கள் பின்பு இயக்குனர் தான் செய்த தவறுக்கு துணை நடிகைகளிடம் மன்னிப்பு கேட்பதால் பிரச்சினை சுமுகமாக முடிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *