பதிலடி கொடுத்த தளபதி விஜய் : Vijay Upload selfie picture in official Twitter ID

Thalapathy Vijay selfies with Fans

தளபதி விஜய் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளிலும் அவரின் ரசிகர்கள் அவருடன் இருந்துள்ளார்கள். சமீபத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்தார் அங்கு சென்றும் விசாரணை நடத்தி பின்பு சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களை பதிவேற்றி வந்தார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் மீண்டும் நெய்வேலியில் இருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார்.

அங்கு விஜய் அவர்களை பார்க்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள் அங்கு வந்த விஜய் வண்டியின் மேல் ஏறி ரசிகர்கள் மத்தியில் Selfi எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தை நடிகர் விஜய் தன்னுடைய அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவேற்றியுள்ளார் இது தற்போது வைரலாகி வருகிறது,.

One Comment on “பதிலடி கொடுத்த தளபதி விஜய் : Vijay Upload selfie picture in official Twitter ID”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *