மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் சம்பளம் எவ்வளவு ? வெளியான புதிய தகவல்

Master Movie Vijay Salary : actor vijay salary 2020

தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை நடிகர் விஜய் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது நடிகர் விஜய் கடலூரில் படப்பிடிப்பில் இருந்தார் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு சென்று விஜய் அவர்களை சென்னைக்கு அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் வீட்டில் நேற்றைய தினமும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது, ஏற்கனவே நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

இந்த சோதனை மூலமாக நடிகர் விஜய் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *