ரசிகர்களின் கஷ்டத்தை உணர்ந்த விஜய்

Master audio launch venue

நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெறும். சமீபத்தில் அவர் நடித்த பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.

கடுமையான கூட்டம் நெரிசல் காரணமாக காவல்துறையினர் விஜய் ரசிகர்கள் மீது சிறிய அளவில் தடியடி நடத்தினார்கள். இதைக் கருத்தில் கொண்ட நடிகர் விஜய் தனது ரசிகர்கள் இப்படிப்பட்ட சிரமத்திற்கு உள்ளாகாமல் இசை வெளியீட்டு விழாவை கண்டுகளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

மார்ச் 15 ஆம் தேதி சென்னையில் உள்ள leela palace-ல் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த இடம் பொருத்தவரைக்கும் ரசிகர்கள் அதிகளவில் அமரும் வசதி இல்லை. அதன் காரணமாக இசை வெளியீட்டு விழாவை சன் தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *