ரஜினிக்கு வெடிகுண்டு மிரட்டல் !

Bomb threat to Superstar Rajinikanth’s house

.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று(June18) காலை 10.30 மணியளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதனால் பதறியடித்து போன போலீஸார் உடனடியாக ரஜினியின் வீட்டுக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

பாம் ஸ்குவாட் மற்றும் போலீஸ் நாயுடன் போலீசார் உடனடியாக நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் சோதனை செய்தார்கள். இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்று போலீசார் உறுதி செய்தனர். 

கால் யார் பண்ணியது? யார் என போலீசார் விசாரித்ததில் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் என தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மாணவனுக்கு சற்று மனநலம் பாதிப்பு என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக போலீசார் கைது நடவடிக்கையை தவிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *