Lift டீஸர் எப்போது வெளியாகும் ?

Kavin Lift Movie Updates : Bigg Boss Kavin And Amritha Aiyer’s Lift Movie First Look Posters

விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் நடிக்கும்போதே கவின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் விஜய் டிவி நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் இதன்மூலமாக அவருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்கள். ஆனால் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகின்றார் என்பதை பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது.

தற்போது கவின் ஹேப்ஸி தயாரிப்பில், வினித் வரபிரசாத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கவினுடன் கரம் கோர்க்கிறார் பிகில் பட நடிகை அம்ரிதா. இந்தத் திரைப்படத்திற்கு ‘லிஃப்ட்’ என்ன பெயர் வைத்துள்ளார்கள். இந்த படத்திற்கான போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் விரைவில் இத்திரைப்படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *