Master Audio Launch Update : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் ?

மாஸ்டர் ஆடியோ லான்ச் | Master audio launch date

விஜய் நடிக்கும் திரைப்படம் வெளியாகும் அந்த நாளில் இருக்கும் அதே வரவேற்பு அந்தத் திரைப்படத்திற்காக நடைபெறும் இசை வெளியீட்டு விழாவிற்கும் இருக்கின்றது.

சமீபகாலமாக விஜய் தன்னுடைய படங்களுக்கான இசை வெளியீட்டு விழாவில் சில அரசியல் வசனங்களை பேசி வருகிறார் ஆளும் அரசுகளை விமர்சிப்பதில் பேசி வருகிறார்.

தற்போது நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள், இந்த சோதனை அரசியல் தலையீட்டால் தான் நடைபெற்றது என பல்வேறு விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மார்ச் மாத இறுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது. அந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தன்னுடைய வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றி ஏதேனும் கருத்து கூறுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

One Comment on “Master Audio Launch Update : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *