IT raid in actor Vijay’s Master shooting spot | AGS Entertainment IT raid | Tamil News

IT raid in actor Vijay

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பிகில் திரைப்படம் வெளியாகியது இத்திரைப்படம் வியாபார ரீதியாக மிகப் பெரிய வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் பெரும்பாலும் தன்னுடைய திரைப்படங்களில் மத்திய மாநில அரசுகளை விமர்சித்து பல்வேறு வசனங்களை பேசியிருந்தார்.
தற்போது பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் IT Raid
நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி தற்போது மாஸ்டர் திரைப்படத்திற்காக நெய்வேலியில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்தார். அங்கு சென்று விசாரணைக்காக நடிகர் விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விசாரணையில் நடிகர் விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பதை பற்றிய தகவல்கள் கேட்டு விசாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *